இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா ஆகியோர் உள்ளிட்ட 35 பேர் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
கடைசியாக வந்த தகவலின்படி கோத்தபய ராஜபக்ச கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கோத்தபய 13 லட்சத்து 76 ஆயிரத்து 140 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 12 லட்சத்து, 88 ஆயிரத்து 367 வாக்குகள் பெற்றுள்ளார்.
இருவருக்கும் இடையே இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.