தூத்துக்குடியில் ராகுல்காந்தி பரப்புரை..!!

உண்மையான விசுவாசத்துடன் பணியாற்றினால் எம்.எல்.ஏக்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனையடுத்து அந்த 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். 

அங்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலர், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைதொடர்ந்து ராகுல் காந்தி, தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் அக்கட்சியின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார்.

அப்பொழுது பேசிய அவர், நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகம் என அனைத்து ஜனநாயக தூண்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது கைக்குள் வைத்திருப்பதாக கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்வதற்கு அதிகார பலமும், பண பலமுமே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், உண்மையான விசுவாசத்துடன் பணியாற்றினால் எம்.எல்.ஏக்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே