சீமான், சரக்குமார் எங்கள் அணிக்கு வரலாம் – மநீம தலைவர் கமல்ஹாசன்

சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில், கமலஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமலஹாசன் அவர்கள், நான் ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

அதற்கு இன்னும் 5 வருடங்கள் உண்டு. இப்போது வயது 60 எனக்கு. சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக உட்பட இரண்டு கட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளனர். 

அவர்கள் நல்ல பணியை செய்துவிட்டு மரியாதை இல்லாமல் உள்ளனர்.

அவர்களை மக்கள் நீதி மையத்தில் சேர அறைகூவல் விடுகிறேன் என்றும், நல்லவர்களுக்காக மக்கள் நீதி மையத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே