சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய பல நல்ல திட்டங்களை முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக இருந்தது.

முதல்வர் உத்தரவின்படி தற்போது ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே