தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே