10-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு உதவித் தொகை – சிபிஎஸ்இ அறிவிப்பு..!!

பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, 10-ம் வகுப்பை முடித்த மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும், திறமையான மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் உதவித்தொகை வழங்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,

* ஓற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* 10-ம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள்.

* சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

* 10-ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

* மாத கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள்.

* விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 10 ஆகும். விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிசம்பர் 28 ஆகும்.” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள், www.cbse.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே