தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சியில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு  அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் 9 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு 60 சதவீத நிதி, மாநில அரசு 40 சதவீத நிதி பங்களிப்புடன் இரு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நேரத்தில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கென ஆகும் 3575 கோடி ரூபாயில் 2145 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பங்காக 1430 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே