முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தப் பின் எல்.முருகன் பேட்டி..!!

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த போது வேல் யாத்திரை குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி வாழ்த்து கூறவே முதல்வர், துணை முதல்வரை சந்தித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

முதல்வருடான சந்திப்பில் வேல் யாத்திரை, அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என கூறினார்.

தமிழகத்தில் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

பீகாரில் பாஜக வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் வெற்றி பெரும் எனவும் தெரிவித்தார். வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என கூறினார்.

பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும் என திட்டவட்டமாக கூறினார்.

தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சாலை, கோவில் வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அரசு முன்னெச்சரிக்கையாக கைது செய்வது கண்டத்தற்குரியது என கூறினார்.

பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் சொன்னது சரிதான் என கூறினார். வேல் யாத்திரைக்கு அரசு தடை விதிப்பதால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு என தெரிவித்தார். சாலையில் செல்பவர்களைக்கூட முன்னெச்சரிக்கையாக கைது செய்வது ஏன்? என்றும், தேர்தல் வரக்கூடிய தமிழகத்தில் கூட்டம் நடத்தாமல் எப்படி இருக்க முடியும் என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

எனவே வேல் யாத்திரை என்பது மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல என கூறினார். கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே