சனம் ஷெட்டிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளது…

நடிகை சனம் ஷெட்டிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பிக்பாஸ் தமிழ்-3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருமணம் செய்வதாக ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தர்ஷன் மீது நடிகை சனம் செட்டி புகார் அளித்திருந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தர்ஷன் விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு சென்னைக்கு வந்ததாகவும், ஒரு புரோடேக்சன் கம்பேனியில் வேலையை தொடங்கியதாகவும் கூறினார்.

மேலும் ஒரு விளம்பர படத்தில் நடிக்கும்போது தான் சனம் ஷெட்டி தனக்கு முதலில் அறிமுகமானதாக கூறிய தர்ஷன், சினிமா சார்ந்து சனம் ஷெட்டி தனக்கு நிறைய உதவிகளை செய்துள்ளதாகவும் அதை தான் மறுக்கபோவதில்லை என்றும் தெரிவித்தார். 

வேறு ஒரு துணிக்கடை விளம்பரம் நல்ல பிரபலமானதால் தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியார் தொலைக்காட்சியினர் அழைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அங்கிருந்து வெளியே வந்த பின்னர் ஒரு மாதத்திற்கு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை சனம் தான் பயன்படுத்தி வந்ததாக கூறினார்.  

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே சென்னை வந்ததாக கூறிய தர்ஷன், நடிகை சனம் கொடுக்கும் நிபந்தனைகளுக்கு எல்லாம் தன்னால் ஈடு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தற்கொலை செய்து கொள்வதாக சனம் ஷெட்டி தன்னை மிரட்டியதாகவும் கூறினார். 

மேலும் சனம் ஷெட்டிக்கும் தனக்கும் நிச்சயதார்த்தமானது சனம் வீட்டினருக்கு மட்டுமே தெரியும் என்று கூறிய தர்ஷன், தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து இருந்ததாகவும் அதை சனம் ஷெட்டிக்கு திருப்பி கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் சனம் ஷெட்டியின் மீது வழக்கு தொடக்கபோவதில்லை என்று தெரிவித்த தர்ஷன் அவர் செய்த உதவிகளுக்கு நன்றியோடு இருப்பேன் என்று கூறிய தர்ஷன், சனம் செட்டிக்கு வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் காவல் ஆணையர் தன்னிடம் விசாரித்தால், அவரிடம் தன்னுடைய விளக்கத்தை அளிப்பேன் என்றும் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே