மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்!

வருமான வரித்துறை விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் விஜய் இன்று மீண்டும் கலந்து கொண்டார்.

கடலூர்-விருதாசாலம் சாலையில் உள்ள நெய்வேலி என்எல்சி ஆலை  2ம் எண் சுரங்கத்தில், அப்படத்தின் சண்டை காட்சி படம்பிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த புதன்கிழமை சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யை விசாரணைக்காக சென்னை பனையூரிலுள்ள வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இந்த விசாரணை  நேற்று மாலை வரை நீடித்தது.

இதனால் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. எனினும் நடிகை ஆண்டிரியா, விஜய்சேதுபதி உள்ளிட்டோரை வைத்து படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்நிலையில் நெய்வேலி படப்பிடிப்பில் விஜய் இன்று காலை கலந்து கொண்டார்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே