தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல்…!!

தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் ஒரே கார்டு ஒரே உணவுத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே கார்டு ஒரே உணவு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி வருகிற ஜூன் மாத த்திற்குள் அனைத்து மாநிலங்களும் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதில் கிடைக்கும் தகவலை கொண்டு பின்னர் இந்த திட்டம் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே