நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடந்த நிலையில், முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும் நிலையில், பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தயாரிப்பாளர் சங்கத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்ட போது, சேகர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.