வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் சகிப் அல் ஹசனுக்கு மேட்ச் பிக்சிங் புகாரில் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
2018ஆம் ஆண்டு இலங்கை, ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு தொடரின் போதும், அந்த ஆண்டு நடந்த ஐபிஎல்லின் போதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வலியுறுத்தி தரகர்கள் சிலர் சகிப் அல் ஹசனை அணுகியதாக எழுந்த விவகாரத்தை ஐசிசி விசாரணை செய்து வந்தது.
இந்நிலையில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்றாலும் கூட தரகர்கள் யாரேனும் இதுபோல அணுகினால் அதை ஐசிசிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையில் உள்ள விதிமுறைகளை சகிப் அல் ஹசன் பின்பற்றவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதனால் சகிப் அல் ஹசன் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓராண்டு இடை நீக்கம் செய்யப்படுவதாகவும், மொத்தம் இரண்டு ஆண்டுகள் அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் தடைவிதித்துள்ளது.