வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 51 புள்ளிகளில் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 844 புள்ளிகளாக அதிகரித்தது.
கடந்த 14 வர்த்தக தினங்களில் 11 நாட்கள் சென்செக்ஸ் 2500 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது.
பெரு நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் சாதகமாக இருப்பது, பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் மூலதன ஆதாய வரியை சீரமைக்க மத்திய அரசு திட்டம் போன்ற செய்திகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்ததால் சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.