சிஎஸ்கே-வின் தோல்விக்கு இதுதான் காரணம்..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 2 தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துள்ளது.

இந்நிலையில் அணியின் பிரச்சினைகளை அலசுகிறார் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளெசிஸ்:

இப்போதைக்கு குழம்பிய நிலையில் இருக்கிறோம். முக்கிய வீரர்களை இழந்திருக்கிறோம்.

சவாலாகத் திகழ்வதற்கான அணியின் சமச்சீர் தன்மைக்காக தற்போது கண்டுப்பிடிக்க வேண்டும்.

என்ன மாதிரியான பிட்ச் என்பதைப் பொறுத்து அதற்குத்தக்க ஆளுமையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பிட்சும் வித்தியாசமாக உள்ளது.

எங்கள் வரிசையில் ரெய்னா, ராயுடு இல்லை.

ஆகவே வெற்றிக்கூட்டணியை கண்டுப்பிடிக்க முயன்று வருகிறோம். இந்த 3 நாட்களில் நிறைய கற்றுக் கொண்டோம்.

டெல்லி கேப்பிடல்ஸ் நன்றாக வீசினர், ஆனால் எங்களிடம் தீவிரம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த 12 ஆண்டுகளாக ஸ்பின்னை வைத்துத்தான் அனைத்தையும் தீர்மானித்தோம், இங்கு அது கொஞ்சம் தடுமாறவே செய்கிறது.

ஒவ்வொரு போட்டியும் வேறு பட்ட சூழ்நிலையில் ஆடினோம். அதனால் சரியான அணிச்சேர்க்கைப் பிரச்சினையாகியுள்ளது. மிடில் ஓவர்களில் என்ன வேகம் வீசுவது, என்ன பாணியில் வீசுவது என்பதை இன்னும் கண்டுப்பிடித்துக் கொள்ளவில்லை.

எனவே வலுவான ஒரு பகுதியிலிருந்து கவலை தரும் பகுதிக்கு நகர்ந்துள்ளோம். இதனை மாற்றியமைக்க வேண்டும்.

இப்போதைக்கு நல்ல அணிச்சேர்க்கையை தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு பவுலரை சேர்த்தால் பவுலிங் வலுவாகி பேட்டிங் பிரச்சனையாகும், ஒரு பேட்ஸ்மெனைச் சேர்த்தால் பந்து வீச்சு வலுவிழந்து காணப்படும்.

டாப் பேட்டிங் நிலையில் பிரமாதமாக ஆடக்கூடிய வீரர் இல்லை.

கோச்சிங் பார்வையிலிருந்தும் நிறைய ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். என்ன நடந்தது என்பதை முதலில் சீராய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே