அரசு விழாக்களில் பேனர் வைத்தால் அவை விழாதா?? என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டினார்.
தமது தந்தை ப.சிதம்பரம், கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதே இதற்கு உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கூடாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசு விழாக்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கி இருப்பது விசித்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
காற்றடிக்கும் போது அரசு சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கீழே விழாதா?? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜகவை எதிர்ப்பவர்கள் அந்த கட்சியில் சேர்ந்தால், புனிதர்களாகி விடுவதாகவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.