ரூ.1,600 கோடி முதலீடு : தமிழகத்தில் நவீனமயமாகிறது அரசு பேருந்துத்துறை

ஜெர்மனி இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் டெல்லியில் நடந்த தொழில்முனைவோர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் ஜெர்மனி-இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுக்கு பசுமை நகர்ப்புற இயக்கத்துக்கு 8,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

இதைப்போல் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்த நிதியை பயன்படுத்தி முதல் கட்டமாக BS -6 தரம் கொண்ட 2213 புதிய பேருந்துகளையும், 500 மின்சார பேருந்துகளையும் வாங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பான திட்ட ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும், ஜெர்மனி வளர்ச்சி வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *