சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மே 17ஆம் தேதி வரை இலவச உணவு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சாலையோர பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் அன்றாட உணவுகளுக்கு பெரிதும் கவலைபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மா உணவகத்தில் உணவு இலவசம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் , இந்த சூழலில், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் உணவகமாக அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

இதனை பொதுமக்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே