புதுச்சேரி மனவெளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விஷவண்டு தாக்கியதில் உயிரிழந்தார்.
அவருக்கு வயது 70. அரியான்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் புதுச்சேரி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இவருக்கு விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் சிறுவள்ளிக்குப்பம் பகுதிகயில் விளைநிலம் உள்ள நிலையில் நேற்று அங்கு சென்று விவசாய பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார்.
அப்போது மழை பெய்த நிலையில், மரத்தடியில் ஒதுங்கிய புருஷோத்தமனை விஷவண்டு ஒன்று தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவர், ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வழியிலேயே புருசோத்தமன் உயிர் பிரிந்தது. இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.