நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த ரவுடியை பொதுமக்கள் அடித்து கொலை செய்தனர்.
இராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன், விசைத்தறி தொழிலாளியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இவரது மனைவி விஜயலட்சுமி பலருடன் தகாத உறவுவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தருமபுரியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சாமுவேலுடன் விஜயலட்சுமி கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கல்லூரியில் பயின்று வரும் விஜயலட்சுமியின் மகள் வசந்தியை தன்னுடன் வந்து பாலியல் தொழில் ஈடுபடும்படி சாமுவேல் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனிடையே நேற்று இரவு குருசாமிபாளையத்தில் உள்ள விஜயலட்சுமியின் தாயார் தனம்மாள் வீட்டிற்குள் அரிவாள், ஆசிட் பாட்டில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நுழைந்து சாமுவேல் தேடியுள்ளார்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாமுவேலிடம் இருந்து தனம்மாளை மீட்க 4 மணி நேரமாக பல கட்ட முயற்சி செய்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து புதுசத்திரம் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடம் வந்த புதுசத்திரம் காவல்துறையினரும் தனம்மாளை ரவுடி சாமுவேலிடம் இருந்து காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் கையில் அரிவாள், ஆசிட் வைத்துக்கொண்டு மிரட்டியதால், மூதாட்டியை மீட்க முடியாமல் போலீசார் அதிரடி படைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து வீட்டினை பொதுமக்கள் போலீசார், அதிரடிப்படை வீரர்கள் என அனைவரும் சுற்றி வளைத்ததால், பொதுமக்கள் மீது ரவுடி சாமுவேல் தொடர்ந்து ஆசிட் வீசவே புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் முருகானந்தம் சிறப்பு காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் பலத்த காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் வீட்டின் கூரை மீது ஏறி அட்டையை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்ததால் ரவுடி மூதாட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதன்பின் வீட்டிலிருந்து வெளியே வந்த ரவுடி தப்பிக்க முயன்ற போது பொதுமக்கள் அவரை அடித்து கொலை செய்தனர்.
ரவுடி சாமுவேல் ஆசிட் வீசியதில் காயமடைந்த போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.