கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு : 6 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம்

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ஆறு பேர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் திருபுவனத்தில் கொலை செய்யப்பட்டார்.

மதமாற்றத்தை தட்டி கேட்டதால் ராமலிங்கம் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரெஹ்மான் சாதிக் (39), முகமது அலி ஜின்னா (34), அப்துல் மஜீத் (37), புர்ஹாதீன் (28), ஷாகுல் ஹமீது (27), நபீல் ஹாசன் (28) ஆகிய 6 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் 6 பேர் குறித்து தகவல் தருபவர்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே