மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட்

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளித்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகத்தை இஸ்ரோ அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்‍ கொண்டிருந்தபோது, 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில், கடினமான பொருள் ஒன்று மீனவர் வலையில் சிக்கியது.

இதனைத் தொடர்ந்து அந்த பொருளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். 

பின்னர் வலையில் சிக்‍கியது ராக்‍கெட்டின் எரிபொருள் கலன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து இஸ்ரோவுக்கு தகவல் அளிக்‍கப்பட்டதை அடுத்து இஸ்ரோ அதிகாரிகள் புதுச்சேரி வந்து நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது ராக்‍கெட்டின் பாகம் சிக்‍கியதில், வலை சேதமாகியதாகக்‍ கூறி, பாதிக்‍கப்பட்ட மீனவர்கள் இஸ்ரோ அதிகாரிகளை முற்றுகையிட்டு, நிவாரணம் வழங்க வலியுறுத்தினர். 

இதனால் ராக்கெட்டின் பாகத்தை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளித்த பின்னர் ராக்கெட் பாகத்தை அதிகாரிகள் எடுத்த செல்ல மீனவர்கள் அனுமத்தித்தனர்.

மீனவர்களின் வலையில் சிக்கிய ராக்கெட் எரிபொருள் கலன் பிரத்யேக லாரி மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே