ரூ.1,254 கோடி முதலீட்டிலான தொழில் திட்டங்களை காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வர்

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வகை செய்யும் 3 திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் 217 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

பின்னர் பேசிய பழனிசாமி , விவசாயம், கல்வி, வணிகம் என அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் யாதும் ஊரே திட்டத்தின் மூலம் தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்க உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

இதில், அமைச்சர் எம்.சி சம்பத், தமலைமைச் செயலாளர் சண்முகம், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 38 நாடுகளை சேர்ந்த தூதர்கள் கலந்துக்கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே