பிறந்து 4 மாதங்களே ஆன பேரனை 3 லட்சம் ரூபாய்க்கு பாட்டியே விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம் பட்டியை சேர்ந்த ராஜா மற்றும் மீனா இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகு மீனாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், குழந்தையை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் தன் குழந்தையை பராமரிக்குமாறு தமது தாயிடம் மீனா ஒப்படைத்துள்ளார்.
குழந்தை தனது தாயிடம் பத்திரமாக உள்ளது என எண்ணி வந்த மீனாவிற்கு குழந்தையை மீண்டும் எடுக்கச் சென்றபோதுதான், அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது.
அப்போது மீனாவின் தாய் அந்த குழந்தையை 3 லட்சம் ரூபாய்க்கு மற்றொருவருக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது பெற்றோர் மீது, மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் தனது குழந்தையை மீட்டுத்தரக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனா தம்பதியர் புகார் மனு அளித்தனர்.