பண்டிகையை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் விதிமீறி சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்தது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
பிக் பில்லியன் டே என்ற பெயரில் இந்நிறுவனங்கள் செல்போன், டிவி உட்பட மின்னணு பொருட்கள் மற்றும் ஆடை அலங்கார பொருட்களை 21,300 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளனர்.
இது சிறு, குறு மற்றும் வணிக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் விற்பனை செய்வதில் 50 விழுக்காடாகும்.
எனவே, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களால் தங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.