சாலையில் சென்று கொண்டிருந்த வேன் தீப்பற்றி எரிந்தது

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு விளக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருக்குன்றத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வெங்கடேசன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சின்னமனூரில் இருந்து வேனில் சென்று கொண்டிருந்தார்.

கூத்தியார்குண்டு விலக்கு அருகே சென்றபோது வேன் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

இதை அறிந்த வெங்கடேஸ்வரன் வேனை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியுடன் கீழே இறங்கிவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே வேன் மிச்சம் எரிந்தது. இதையடுத்து கடையில் இருந்த தீயணைப்பு கருவி கொண்டு தீயை அணைக்க வெங்கடேசன் போராடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே