ஐசிஐசிஐ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சாரின் வீடு, சொத்துக்கள் பறிமுதல்

கடன் முறைகேடு வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சாரின் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வீடியோகான் நிறுவனத்திற்கு விதிகளை மீறி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கிய குற்றச்சாட்டில், கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் ஐசிஐசிஐ தலைமைப் பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார்.

நீதியரசர் பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு, சாந்தா கோச்சார் விதிகளை மீறியிருப்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிதி மோசடியின் மூலம், சாந்தா கோச்சாரும், அவரது கணவரும் ஆதாயம் அடைந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முறைகேடாக அடைந்த ஆதாயத்தை மறைக்க நடைபெற்ற பணமோசடிகள் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், சாந்தா கோச்சாரின் மும்பை வீடு, அவரது கணவரின் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் உள்ளிட்ட 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே