மருத்துவமனையில் அமிதாப் பச்சன் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 3 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அமிதாப்பிற்கு கடந்த 1982ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தின் போது ஏற்பட்ட சத்தத்தில் ஹெப்படாட்டிஸ் பி வைரஸ் இருந்து உள்ளது.

இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவிகிதம் செயலிழந்தது. கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தாலும் திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென உடல்நலக் குறைவால் மும்பை சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவிற்கு இணையான தனி அறையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே