பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் லலித் குமார் யாதவ் வெற்றி பெற்றுள்ளார்.

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி(ஐக்கிய ஜனதா தளம்-பாஜக) 123 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் முதல் தொகுதி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் லலித் குமார் யாதவ் தர்பங்கா(கிராமப்புறம்) பகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் 64,929 வாக்குகள் பெற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளரை விட 2,141 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

பிகாரில் சுமார் 80 தொகுதிகளில் 1,000 வாக்குகளே வித்தியாசம் உள்ளதாக முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே