மகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது Nisarga புயல்..

அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து மும்பையில் விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.

இப்புயலுக்கு ‘Nisarga’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயா், வங்கதேசத்தால் பரிந்துரைக்கப்பட்டதாகும்.

Nisarga புயல் மேலும் தீவிரமடைந்து, வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும்’ என்றாா்.

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டம், ஹரிஹரேஷ்வா் மற்றும் டாமன் இடையே நிசா்கா புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

மகாராஷ்டிரத்தில் மும்பை மற்றும் புகா் பகுதிகளிலும் தாணே, பால்கா், ராய்கட், ரத்னகிரி, சிந்துதுா்க் ஆகிய மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் கனமழை பெய்யும் என்றும், மகாராஷ்டிரத்தின் மும்பை மற்றும் கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தை விட மகாராஷ்டிரம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மின் விநியோகம் தடைபடும் என்பதால், உரிய முன்னேற்பாடுகள், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10 குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன.

புயல் பாதிப்புகளை கண்காணிக்க மாநில தலைமை செயலத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் இருந்து புறப்படும் மற்றும் மும்பைக்கு வந்து சேரும் விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவை புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் இருந்து புறப்படும் ஐந்து ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மும்பைக்கு வரவிருந்து 2 ரயில்கள் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு ரயில் மட்டும் திருப்பிவிடப்பட்டுள்ளது.

மேலும் புதன்கிழமை மதியத்திற்குள் மும்பை வந்து சேரும் 12 விமானங்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நோயாளிகள் உள்பட குறைந்தது 1,00,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் நாளை வியாழக்கிழமை பிற்பகல் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகள், பூங்காக்கள், ஊர்வலம் மற்றும் கடற்கரையை ஒட்டி உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு காவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே