15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை நிதி அமைச்சகம் விடுவித்தது.

அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 13 மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், பல மாநிலங்களின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை விடுவித்து வருகிறது.

அதன்படி 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைபடி, 6 வது மாத தவணையாக 13 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் தமிழகத்திற்கு 335.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 15 வது நிதி குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் 335 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.

இதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடியும், இமாச்சல பிரதேஷ் மாநிலத்திற்கு ரூ.952.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கும் வகையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே