பதவியை ஏலத்தில் விட்டால் கடும் நடவடிக்கை – அன்புச்செல்வன் எச்சரிக்கை

உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் விட்டு தலைவர் பதவி வழங்கப்பட்டால் வேட்புமனுத்தாக்கல் தள்ளுபடி செய்யப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 12,236 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடுக்குப்பம் மற்றும் பிஞ்சனூர் ஆகிய பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறிய அவர் பொதுமக்களை மறைமுகமாகவோ நேரடியாகவோ அழுத்தம் கொடுத்துத் தம்மைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என யாரேனும் மிரட்டினால் அவர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே