இராமநாதபுரம் : கமுதி அருகே பழமையான முதுமக்கள் தாழி, கற்கால கருவிகள் கண்டெடுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 300 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் மற்றும் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாராயணபுரத்தை எடுத்த நரசிங்கம்பட்டி என்ற இடத்தில் கால்நடைகள் மேய்க்க சென்றவர்களுக்கு பெரிய அளவிலான மண்பாண்டங்கள் புதைந்து கிடந்தது தென்ப்பட்டுள்ளது.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்தபோது முதுமக்கள் தாழி, கற்கால வளையங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.

அந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டதால், மேலும் தொன்மையான பொருட்கள் கிடைக்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே