தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்த அவர், டீன் பாலாஜி நாதன், கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் மற்றும் டாக்டர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும்; வைரஸ் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை நேரடி கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே