கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்வர்கள் பற்றிய விவரங்கள்

இதற்கு முன் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்வர்கள் பற்றிய விபரங்களை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெருமை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியையே சேரும்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின் முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து 1971 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.

கருணாநிதி முதல்வராக இருந்த காலங்களில் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை கொடுத்து கௌரவித்தனர்.

எம்.ஜி.ஆரின் சமூக சேவையை பாராட்டும் வகையில் அரிசோனா உலக பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை அவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கி சிறப்பித்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை பல்கலைக் கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்பித்து உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே