‘அசுரன்’ பற்றிய ஸ்டாலின் கருத்துக்கு ராமதாஸ் கிண்டல்!

அசுரன் திரைப்படம் கற்றுத்தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள அசுரன் திரைப்படம் ஒரு பாடம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்டாலினின் இந்த கருத்திற்கு ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

குறிப்பாக பஞ்சமி நிலமீட்பு குறித்து பேசும் அசுரன், படம் அல்ல பாடம் என்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் கருத்து அற்புதம் என்றும் ராமதாஸ் கோரியுள்ளார்.

அசுரன் கற்றுத்தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் எனவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே