ஆளுநர் உரையை புறக்கணித்து, ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

தமிழக சட்டமன்ற கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் இன்று தொடங்கிய போது  குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச வலியுறுத்தினார்.

இதையடுத்து ஸ்டாலினை ஆளுநர் சமாதனம் செய்ய முயற்சித்தார். ஆனால் அதை ஏற்காத திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவது, தொழில் வளர்ச்சி குறைவு, குடியுரிமை திருத்த சட்டம், 7 பேர் விடுதலை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப முயற்சித்ததாக தெரிவித்தார்.

ஆனால் அதற்கு ஆளுநர் அனுமதி அளிக்காததால், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் உரையால் என்ன பயன் எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினரான தமிமுன் அன்சாரி, கருப்பு சட்டை அணிந்துக்கொண்டு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே