நீட் ஆள்மாறாட்ட வழக்கு – உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாணவர் உதித்சூர்யா முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் கைதானபோது முன்ஜாமீன் மனுவையே ஜாமீன் மனுவாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாணவரின் வயது மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவாக விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன், நீட் முறைகேட்டிற்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்த முழு தகவலையும் தெரிவிக்கவில்லை என்று முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை பார்க்கும்போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலிருந்து திட்டம் தீட்டப்பட்டது போல தெரிகிறது என கருத்துக் கூறிய நீதிபதி, மாணவனின் வயது, மன அழுத்த பிரச்சனை மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மாணவர் உதித்சூர்யா மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினசரி காலை பத்து முப்பது மணிக்கு ஆஜராக நிபந்தனை விதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, மாணவர் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே