கல்கி ஆசிரமத்தில் கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாய் பறிமுதல்

சென்னை ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 33 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக கல்கி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

மிகப்பிரபலமான கல்கி ஆசிரமத்தின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநில கிளைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தடா அருகே உள்ள வரதய்யபாளையம் ஆசிரமம் சென்னையில் கல்கி விஜயகுமாரின் மகன் கிருஷ்ணனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.

அண்ணாநகர், அடையாறு, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல ஹோட்டல் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் கல்கி ஆசிரமத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 33 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே