RAIN UPDATE : சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

சென்னையில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

நாளை விடுமுறைக்கு ஈடாக பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே