சிதம்பரத்தில் பெய்த கனமழை காரணமாக, நடராஜர் கோயிலை மழைநீர் சூழ்ந்தது.

புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம், மயிலாடுதுறை, கொள்ளிடம் உள்ளிட்ட 7 இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

சிதம்பரத்தில் 34 செ.மீ., மழையும், கொள்ளிடத்தில் 36 செ.மீ., மழையும் பதிவானது. இதனால், சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.மழைநீர் வழிய வழியில்லாததால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.

சித்சபை பகுதி, கோயில் வளாகங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோயில் குளமான சிவகங்கை குளம் நிரம்பி வழிகிறது.

வடிகால் வாய்க்கால்களை சரியாக தூர் வாராததால், தண்ணீர் வடிய வழியில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூர் சாலை துண்டிப்பு கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், கடலூரில் இருந்து சேத்தியாதோப்பு, கும்பகோணம், சிதம்பரம், காரைக்கால் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே