தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. 

இந்நிலையில் கிழக்கத்திய காற்றின் சாதக போக்கின் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே