வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.

சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் 410 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நிவர் புயல் அடுத்த 6 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக வலுவடையும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 410 கிமீ தொலைவில் இப்போது மையம் கொண்டுள்ளது. 

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

கடலூரின் கிழக்கு- தென்கிழக்கில் 320 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது.

தற்போது 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

அதி தீவிர புயலாக மாறி புதுச்சேரி காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால், பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.

இதேபோல் கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதி தீவிர புயலாக மாறி நிவர் புயல் கரையை கடக்கப் போகிறது.

இதன் காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக உச்சகட்ட மழை பெய்யும்.

இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மறறும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே