நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல்1 மணி முதல் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) பிற்பகல் முதல் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ஆம்னி பேருந்து சேவையும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் நிறுத்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

அரசின் மறுஉத்தரவு வரும்வரை பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவா் புயல், புதன்கிழமை பிற்பகல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே