திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் திகார் சிறைக்குச் சென்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்தனர். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரம், 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப. சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் திகார் சிறைக்குச் சென்று ப.சிதம்பரத்தைச் சந்தித்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே