பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதாவது அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதனுடன் பொங்கல் தொகுப்பாக 1கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும்.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த பரிசு தொகுப்பு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே. சர்க்கரை மற்றும் இதர கார்டுதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு கிடைக்காது.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.1000 பொங்கல் பரிசு தர ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.