தமது பிறந்த நாளையொட்டி பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திமுகவில் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்த நாள் என்பதால், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு வெப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்திற்கும் சென்று அவர் மரியாதை செலுத்தினார்.
அப்போது இளைஞரணி நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.