ராஜ்பவனில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார்.

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்திருந்த நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வைத்து காலை 10.30 மணியளவில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மு.அப்பாவு, தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வேலுமணி, வைத்திலிங்கம், தங்கமணி, தனபால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி பாரிவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே