“புற்றுநோயால் ஏற்படும் வலியை நான் அறிவேன்”…. சஞ்சய் தத்துக்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் ட்வீட்!!

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்துக்கு ஆறுதல் தரும் விதமாக தன்னால் அந்த வலியை புரிந்துக்கொள்ள முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் ஆர்.டி., பி.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டனர்.

இதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளக்கப்பட்டன. பின்னர் குணமடைந்தார். வீடு திரும்பிய 61 வயதாகும் சஞ்சய் தத், மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் இடைவெளி எடுத்துக் கொள்ள இருக்கிறேன் என்ற டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மெடிக்கல் சிகிச்சை பெற இருப்பதால் வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக சினிமா ஊடகவியலாளர் கோமல் நத்தா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ‘‘நீங்கள் எப்போதுமே ஒரு போராளி.

அது காரணமாக ஏற்படும் வலியை நான் அறிவேன். ஆனால், நீங்கள் வலிமையானவர், மேலும், இந்த கடின கட்டத்தை கடப்பதை பார்ப்பேன். நீங்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். வாழ்த்து தெரிவிக்கிறேன்’’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2012-ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு 2013-ல் இருந்து 2019 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே