பி.வி.சிந்துவிற்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழா

உலக பேட்மிண்டன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற பி.வி.சிந்துவுக்கு அப்பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பள்ளி மாணவ மாணவிகளிடையே பேசிய பி.வி.சிந்து, ஒவ்வொரு மாணவர்களும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றியை தனதாக்கிக் கொள்ள பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள காய்கறிகள் கொண்ட உணவை மட்டுமே உண்ண வேண்டும் எனவும் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

முன்னதாக பள்ளி மாணவர்களுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடி பி.வி.சிந்து உற்சாகமூட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே